சுற்றுலாப் பயணிகளின் வருகை ஏப்ரலில் வீழ்ச்சி

சுற்றுலாப் பயணிகளின் வருகை ஏப்ரலில் வீழ்ச்சி
Spread the love

சுற்றுலாப் பயணிகளின் வருகை ஏப்ரலில் வீழ்ச்சி

சுற்றுலாப் பயணிகளின் வருகை ஏப்ரலில் வீழ்ச்சி நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது.

ஏப்ரல் முதல் மூன்று வாரங்களில் மொத்தம் 107,124 சுற்றுலாப் பயணிகளே நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

இந்த எண்ணிக்கையை ஆண்டின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடும் போது, ஒரு மந்தநிலையை காட்டுகிறது.

ஏப்ரல் மாதத்தில் 100,000 சுற்றுலாப் பயணிகள் மூன்று வாரங்களில் வருகை தந்துள்ளனர்.

நாளாந்த வருகை சராசரி 5,100 என்ற அளவில் குறைந்துள்ளது. அதே நேரத்தில் வாராந்தம் சராசரி வருகை 35,000 ஆக குறைந்தது.

மொத்த சுற்றுலா பயணிகளின் வருகை

எனினும், இந்த மந்தநிலை அசாதாரணமானது அல்ல, மாதாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை போக்குகளைப் பார்க்கும்போது, தொற்றுநோய்க்கு முன்பே, முதல் காலாண்டில் ஒரு உயர்வுக்குப் பிறகு, ஏப்ரல் மாதத்தில் மந்தநிலை காணப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் ஆரம்பமாவதற்கு முன் வரும் இரண்டு மாதங்களில் வேகம் மேலும் குறையும்.

ஏப்ரல் மாதத்தில் மொத்த சுற்றுலா பயணிகளின் வருகையில் 17 சதவீதமானவர்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, 11 சதவீதமானவர்கள் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ளதோடு, 10 சதவீதமானவர்கள் பிரித்தானியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.