சீனாவின் புதிய விமான தாங்கி கப்பலை படம்பிடித்து வெளியிட்ட அமெரிக்கா – முறுகல் உச்சம்

Spread the love
சீனாவின் புதிய விமான தாங்கி கப்பலை படம்பிடித்து வெளியிட்ட அமெரிக்கா – முறுகல் உச்சம்

உலக வல்லாதிக்க அரசாக உருவெடுத்து வரும் சீனா தனது இராணுவ பலத்தை அதிகரித்து செல்கிறது ,உலக அரசியல் ஒழுங்கில் ஏற்பட்டு வரும் திடீர் எதிர்மறை மாற்றங்கள் மூன்றாம் உலக போரை தோற்றுவிக்கும் அபாயம் நெருங்கி வரும் நிலையில் உலக சண்டியர்கள் வேகமாக தமது இராணுவ தளபாட தயாரிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருவதுடன் ,நாடுகளை உடைக்கும் முயற்சிகளில் அதி தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர் .

அந்த வகையில் சீனா தற்போது புதிதாக நிர்மாணித்து வெள்ளோட்ட சோதனைகள் விட்டுள்ள புதியவகை Type 001A விமான தங்கி கப்பல் தற்போது சீனாவின் Yulin Naval தளத்தில் தரித்துள்ளது ,இது Sanya நகரின் அருகில் உள்ளதாகும் .குறித்த விமான தாங்கி கப்பலில் J-15 Flying Shark multirole விமானங்கள் மற்றும் Z-18 உலங்குவானூர்திகள் என்பன நிறுத்த பட்டுள்ளன ,மேற்படி கப்பலையே அமெரிக்கா தனத்து செய்மதி ஊடக படம் பிடித்து வெளியிட்டுள்ளது .

இந்த செயலானது நாங்கள் உங்களை தீவிரமாக கண்காணித்து கொண்டு இருக்கிறோம் எமது கழுகு பார்வையில் இருந்து தப்பித்து கொள்ள முடியாது என்ற செய்தியை மிரட்டும் தொனியில் அமெரிக்கா வெளியிட்டுள்ளது .

கொங்கொங் கலவரம் உக்கிரம் பெற்றுள்ள நிலையில் இந்த விடயம் முதன்மை பெற்று செல்வது விரைவில் மூன்றாம் உலக யுத்தம் ஆசிய பகுதியில் இருந்து வெடிக்கும் என்றே அவதானிக்க முடிகிறது .- வன்னி மைந்தன் –

Leave a Reply