சிவாஜிலிங்கம் சுயேட்சையாக போட்டி

சிவாஜிலிங்கம் சுயேட்சையாக போட்டி
Spread the love

சிவாஜிலிங்கம் சுயேட்சையாக போட்டி

சிவாஜிலிங்கம் சுயேட்சையாக போட்டி இட போவதாக தெரிவிப்பு ,இலங்கையில் பொது வேட்பாளராக ஒருவரை நிறுத்த மறுத்தால் நான் சுயேட்சையாக போட்டியிடுவேன் என யாழ்ப்பாணத்தின் முன்னாள் மாநகர உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் தெரிவித்து இருக்கின்றார் .

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக விளங்கி மக்களுக்கு அளப்பெரும் சேவையை ஆற்றிய சிவாஜிலிங்கம் அவர்களே தற்பொழுது இவ்வாறு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கம்

கடந்த ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கம் அனுராதாபுரம் பகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி இருந்தார் .

அதனை அடுத்து தற்பொழுது மீளவும் தான் அவ்வாறு போட்டியிட போவதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார் .

பொதுபட்ராக ஒருவரை நிறுத்தி வடபகுதியில் போட்டியிட தயாராகி வருகின்ற நிலையிலேயே தற்பொழுது இந்த அறிவிப்பினை சிவாஜிலிங்கம் விடு த்திருக்கிறார்.

சுமந்திரன் உள்ளிட்டவர்கள் பல குற்றச்சாட்டு

பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு எதிராக சுமந்திரன் உள்ளிட்டவர்கள் பல குற்றச்சாட்டுகளை வைத்து அவர்களுக்கு எதிரான விஷம பரப்புகளை மேற்கொண்டு வருகின்றனர் .

அது இலங்கை இறையாண்மைக்கும் தமிழுக்கும் எதிரான ஒட்டுமொத்த சதி நடவடிக்கையின் என அவர் குற்றம் சுமத்தி வருகின்றார் .

அதனை அடுத்து தற்பொழுது இந்த கருத்தினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஐயா சிவாஜிலிங்கம் அவர்கள் விடுத்திருக்கின்றார்.