சிறைக்கு செல்லும் பீதியில் மைத்திரி

கொழும்பு குண்டு வெடிப்பு மைத்திரி உள்ளிட்டவர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு
Spread the love

சிறைக்கு செல்லும் பீதியில் மைத்திரி

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 10 கோடி ரூபா இழப்பீட்டை செலுத்த தவறினால் நான் சிறைக்கு செல்ல நேரிடும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதனால், தமக்கு நெருக்கமான மக்கள் மற்றும் அன்புக்குரியவர்களிடமிருந்து பணத்தை திரட்டுவதற்கு நிதியமொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சிறைக்கு செல்லும் பீதியில் மைத்திரி

இவ்வளவு பாரிய தொகையை நட்டஈடாக செலுத்தும் திறன் தன்னிடம் இல்லாததால், மக்களிடம் பணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

என்னிடம் சொந்தமாக உந்துருளி கூட இல்லை. நிதியத்தை நிறுவுவதற்காக குழுவொன்றை அமைப்பேன். நாடு முழுவதிலும் இருந்து பணம் சேகரிக்க வேண்டும்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கத் தவறினால், நான் சிறைக்கு செல்ல நேரிடும்” என்று அவர் கூறினார்.

மூன்று ஏக்கர் நிலத்தில் மாம்பழம் பயிரிட்டேன். எனக்கு மாம்பழ செய்கையை தவிர வேறு வருமான வழியில்லை என்றார்.