
சிறுவர்களால் வருடாந்தம் 5000 குற்றச்செயல்கள் பதிவு
இலங்கையில் வருடாந்தம் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட சுமார் 5,000 குற்றச்செயல்கள் பதிவாகுவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பாவனை மற்றும் செல்போன் பாவனையே இவ்வாறான பல குற்றச் செயல்களுக்கு வழிவகுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
”இலங்கையில் வருடாந்தம் சிறுவர்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் சுமார் 5,000 பதிவாவதாக இந்த புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
எமது நாட்டில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ள போதைப்பொருள் பிரச்சினையே.
சிறுவர்களால் வருடாந்தம் 5000 குற்றச்செயல்கள் பதிவு
சிறுவர் துஷ்பிரயோகம் மற்றுமொரு மிகப்பெரிய காரணி. இலங்கையில் மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் பதிவாகும் சிறுவர்கள் தொடர்பான குற்றங்கள் பற்றி எங்களுக்குத் தெரியும்.
கையடக்கத் தொலைபேசிகள் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு இட்டுச் செல்லும் ஆபத்தான ஆயுதமாக மாறியுள்ளது. இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகத்தை குறைக்க நாம் முயற்சி எடுத்தால், பெற்றோர்கள் கண்டிப்பாக வீட்டில் கையடக்கத் தொலைபேசி பாவனையை கட்டுப்படுத்த வேண்டும்.” என அவர் குறிப்பிட்டார்.
- சிறுவன் அடித்து கொலை ரவுடி மயமாகும் இலங்கை
- 80 பில்லியன் கடனை செலுத்தாத உயர்மட்ட வர்த்தகர்கள்
- வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதை நீதி கேட்டு யாழில் போராட்டம்
- வாகன விபத்துக்களில் ஐவர் பலி
- ஜனாதிபதி ரணில் பிரேசில் ஜனாதிபதியுடன் சந்திப்பு
- மனைவி பிள்ளைகளை பணயக்கைதிகளாக்கி நகைகள் திருட்டு
- நீரில் மூழ்கி மாணவன் பலி
- மீன்பிடிக்க 48 மணித்தியாலங்களுக்கு செல்ல வேண்டாம்
- ஹந்தான மலையில் சிக்கிய மாணவர்கள் மீட்பு
- ஓய்வுபெற்றவர்களின் சம்பளம் ஜனவரி முதல் 2500 ரூபாய்