சிறிதரனுக்கு முகமூடி ரவுடிகள் மிரட்டல்

சிறிதரனுக்கு முகமூடி ரவுடிகள் மிரட்டல்
Spread the love

சிறிதரனுக்கு முகமூடி ரவுடிகள் மிரட்டல்

சிறிதரனுக்கு முகமூடி ரவுடிகள் மிரட்டல் விடுத்துள்ளனர் .யார் இந்த குழு என்ற மிரட்டினார்கள் இதன் பின்புலம் என்ன என்பதை ஸ்ரீதரன் அவர்கள் பின்வருமாறு தெரிவித்துள்ளார் .

எனது பதில் இரண்டு பேர் வீதமாகவும் ஒன்பது பேர் முகங்களை மூடிய கவசங்களால் முகங்களை மூடியபடி .

தங்களுடைய மோட்டார் சைக்கிள் முகம்களை மூடிய படி யாழ்ப்பாணத்தில் இந்து கல்லூரியில் ஒழுங்கையின் ஊடாக இவர்கள் சென்று வந்ததை என்னுடைய வீட்டினுடைய சிசிடிவி கேமரா மூலமாக எடுக்கப்பட்டது .

வாள்களோடு பட்டப்பகலில் முகமூடி ரவுடிகள்

ஒன்பது பேர் வாள்ககளோடு ,பட்டப்பகலில் முகமூடி அணிந்தவாறு கையிலே தாங்கியவாறு திரிகிறார்கள் என்றால் ,

யாழ்ப்பாணத்தின் நடவடிக்கையும் யாழ்ப்பாணத்தில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் கடற்படை விமானப்படையினுடைய செயல்பாடுகளும் எவ்வாறு இருக்கிறது என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம் .

யாழ்ப்பாணத்தில் நடக்கின்ற பல்வேறுபட்ட இடங்களில் நடைபெறுகின்ற வாள்வெட்டு சம்பவங்கள்.

மக்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கைகள் என்பதில், நடவடிக்கைகளுக்கு பின்னால் ராணுவ புலனாய்வாளர்களும், மற்றொரு ஏனைய கடற்கரை விமானப்படை போலீஸ்சாருடைய ,உளவுத்துறையினரும் இருக்கிறார்கள் என்பதை இது மிக துலாம் புறமாக வெளிப்படுத்துகின்றன .

இந்த காலத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலே பல்வேறுபட்ட இடங்களில் பீல்பைக் என சொல்லப்படுகிற மோட்டார் சைக்கிள்களில் இவ்வாறு கறுத்த துணிகளை கட்டியவாறு .

பீல் பைக்கில் இராணுவ புலனாய்வாளர்கள்

பீல் பைக்கில் வந்து ,பலரை சுட்டு விட்டு சென்றதும் பல இடங்களில் தாக்குதல்களைச் செய்ததும் ராணுவ புலனாய்வாளர்களும் ராணுவத்தை சேர்ந்தவங்களும் செய்திருந்தார்கள் .பயன்படுத்தி இவ்வாறான வேலையை செய்கிறார்கள் .

என்றால் இது ஏன் இந்த ராணுவ புலனாய்வாளர்கள் அல்லது அங்கு இருக்கின்ற ஏனைய கடற்கரை விமானப்படையினுடைய புலனாய்வாளர்கள் செய்யக்கூடாது என்கிற கேள்வி எங்களுக்கு எழுகிறது .

என்னை அச்சமூட்டும் வகையிலே ,இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

சபாநாயகருக்கு எழுத்து மூலமாக கொடுத்து அதனை நான் உரிய தரப்புகளுக்கும் தெரியப்படுத்த இருக்கின்றேன்.

ஆகவே இது என்னுடைய வீட்டுக்கு முன்னால் நடைபெற்று இருக்கிறது என்றால் யாழ்ப்பாணத்தில் ஏனைய இடங்களும் ஏனையவர்களுக்கும் இதில் அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது .

உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க தவறினால், யாழ்ப்பாணம் இன்னும் ஒரு மோசமான நிலைக்கு செல்லும் என்பது தான் ,என்னுடைய கருத்து.