சிதைந்த கனவால் சிதறிய குயில் ….!
கல்வி கூடம் ஏற இங்கே
காசு கேட்குமோ ..?- அட
காமராஜர் கட்டி வளர்த்த
கல்வி சாகுமோ ?
நீதி மன்றமே நீதி இல்லையா
நீசர் கொல்லாயோ …?
ஆசை குயில்கள் பாடிட இங்கே
அடுக்கு தடைகள் போடுமோ …?
மனிதம் வாழத்தானே இங்கே
மன்றில் ஆட்சி நடக்குதோ ..?
மரணம் குடித்து கல்வி வாழின்
மனிதம் வாழுமோ …?
ஏழை ஒருவன் எழுந்தே வந்தால்
ஏற்க மறுக்குமோ ..?
மக்கள் காக்கும் சட்டம் இங்கே
மரணம் கேட்குமோ …….?
சாவின் மூலம் தானே இங்கே
சாதனை நடக்குமோ ..? – அட
வாழும் மனிதா நீயும் தானே
வாய்மை கொள்ளடா …..
ஆசையோடு பறந்த பறவை
அந்தோ வீழ்ந்ததே
அப்பன் ,ஆத்தா விழி கண்ணீர் ஓட
அரசு வைத்ததே ….!
வன்னி மைந்தன் (ஜெகன் -லண்டன் )
ஆக்கம் -02/09/2017
தமிழகத்தில் 01,09,2017அப்பாவி மாணவி அனித்தா மருத்துவ அனுதி இன்றி
தூக்கில் தொங்கி உயிர் விட்ட பேரதிர்ச்சி அறிந்த போது….