சார்லஸ் மனைவி கமிலாவுக்கு கொரோனா

Spread the love

சார்லஸ் மனைவி கமிலாவுக்கு கொரோனா


73 வயதான சார்லஸ், 74 வயதாகும் கமிலா ஆகிய இருவருமே கொரோனா தடுப்பூசியின் 3 டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மனைவி கமிலாவுக்கு கொரோனா
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மனைவி கமிலாவுடன்

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லசுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஏற்கனவே கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் அவரை கொரோனா தொற்றிய நிலையில், தற்போது 2-வது முறையாக வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.

இந்த நிலையில் சார்லசின் மனைவியும், இளவரசியுமான கமிலாவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த கமிலா, தினமும் கொரோனா பரிசோதனை செய்து வந்தார்.

அந்த வகையில் நேற்றைய பரிசோதனையின்போது அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

73 வயதான சார்லஸ், 74 வயதாகும் கமிலா ஆகிய இருவருமே கொரோனா தடுப்பூசியின் 3 டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

    Leave a Reply