சாய் பல்லவியுடன் டூயட் பாட விருப்பம்…. ஓப்பனாக சொன்ன சிரஞ்சீவி

Spread the love

சாய் பல்லவியுடன் டூயட் பாட விருப்பம்…. ஓப்பனாக சொன்ன சிரஞ்சீவி

சாய் பல்லவி நடித்துள்ள லவ் ஸ்டோரி படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

சாய் பல்லவியுடன் டூயட் பாட விருப்பம்…. ஓப்பனாக சொன்ன சிரஞ்சீவி
சாய் பல்லவி, சிரஞ்சீவி


தெலுங்கில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘லவ் ஸ்டோரி’. காதல் கதையம்சம் கொண்ட இப்படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார்.

இந்நிலையில் லவ் ஸ்டோரி படத்தின் அறிமுக நிகழ்ச்சி சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிரஞ்சீவி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

“நல்லவேளை போலா ஷங்கர் படத்தில் சாய் பல்லவி நடிக்கவில்லை. ஏனென்றால், அவருடன் ஜோடியாக நடித்து, டூயட் பாடவே நான் விரும்புகிறேன். அவருக்கு அண்ணனாக நடிக்க விருப்பமில்லை என்று வேடிக்கையாக கூறினார்.

போலா ஷங்கர் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்க முதலில் சாய் பல்லவியை தான் படக்குழு அணுகியது. அவர் நடிக்க மறுத்துவிட்டதால், அக்கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Leave a Reply