சம்பந்தனும் சுமந்திரனும் துரோகிகள்

சம்பந்தனும் சுமந்திரனும் துரோகிகள்
Spread the love

சம்பந்தனும் சுமந்திரனும் துரோகிகள்

சம்பந்தனும் சுமந்திரனும் துரோகிகள் என மஹிந்த ராஜபக்சவின் கட்சி உறுப்பினர்கள் திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளனர் .

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும் ,அதனுடைய பேச்சாளராகவும் விளங்கிய சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர், தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தவர்கள் என ஸ்ரீலங்கா பெரமுனா தெரிவித்துள்ளது .

தேசிய ஏற்பாட்டாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ,ரோகித அபய குணவர்த்தன தெரிவித்த இந்த விடயம் தற்பொழுது பெரும் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

ஊடகங்களை சந்தித்து பேசும் பொழுது இலங்கையை ஆண்ட ஜனாதிபதியான, மஹிந்த ராஜபக்சா , தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதற்கு முன் வந்ததார் .

தீர்வினை குழப்பிய சம்பந்தன் சுமந்திரன்

ஆனால் அந்த தீர்வினை குழப்பி அடித்ததில் ,சம்பந்தன் மற்றும் சுமந்திரன் தீவிரமாக செய்யப்பட்டார்கள் .

தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதற்கு ,இலங்கையினுடைய ஜனாதிபதிகள் தயாராகி வந்ததாகவும் ,அதனை தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்துவதாக கூறிக் கொள்ளும் இவ்வாறானவர்களே குழப்பி வருவதாக அவர் இதன் ஊடாக தெரிவித்துள்ளார்.

தமிழ் கட்சிகள் ஒன்றுபட மறுத்து ,இரண்டு பட்டு நிற்பதும் ,அவர்களை சாதுரியமாக இலங்கையினுடைய ஆளும் வர்க்கங்கள் பயன்படுத்தி வருகின்றன .

அந்த தமிழ் மக்களுக்கு வழங்கப்படக்கூடிய தீர்வுகளை குழப்புவதாக, இதன் ஊடாக பார்க்கப்படுகிறது .

எதிர்வரும் தேர்தலில் சம்பந்தன் சுமந்திரன் தமிழ் மக்களுக்கு செய்த துரோகத்தை அடுத்து ,அவர்களை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார் .

இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கின்ற விடயத்தை தெரிவித்துள்ளார் .

சம்பந்தன் சுமந்திரன் மீது தமிழ் மக்களுக்கு அடங்காத கோபம்

சம்பந்தன் சுமந்திரன் மீது தமிழ் மக்களுக்கு அடங்காத கோபம் இதுவரை உள்ளது .

அவ்வாறான மன நிலையே தற்பொழுது சிங்கள அமைச்சர் ஒருவரும் உள்ளதாக தெரிவித்து பர பரப்பை ஏற்படுத்தியுள்ளார் .

சிங்கள மக்கள் மத்தியிலும் சிங்கள அரசியல்வாதிகள் மத்தியிலும் சம்பந்தன் சுமந்திரனுக்கு எதிரான கருத்துக்கள் நிலவுவதை இவை எடுத்துக்காட்டுகின்றன.

எதிர்வரும் தேர்தலில் மொட்டுக்கட்சி வெற்றியை பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .

மக்களினால் விரட்டி அடிக்கப்பட்ட இந்த கட்சி ,எவ்வாறு இந்த தேர்தலில் வெற்றி பெறப் போகிறது என்கின்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகின்ற நிலையில் ,இந்த விடயம் தற்பொழுது சூடு பிடித்துள்ளது குறிப்பிட தக்கது .