சட்டுனு 5 நிமிடத்தில் ஒரு மோர் குழம்பு

சட்டுனு 5 நிமிடத்தில் ஒரு மோர் குழம்பு
Spread the love

சட்டுனு 5 நிமிடத்தில் ஒரு மோர் குழம்பு

இப்போது நல்ல வெயில் காலமாக இருக்கிறது. தினமும் மோர் சாப்பிட்டால் உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது.

சாதத்தில் வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய மோர் போட்டு தினமும் சாப்பிட்டால் கொஞ்சம் போர் அடிக்கும். வித்தியாசமாக கேரளா ஸ்டைலில் இப்படி ஒரு மோர் குழம்பு வைத்து பாருங்கள்.

தேங்காய் எதுவும் சேர்க்கப் போவது கிடையாது. வெறும் ஐந்தே நிமிடத்தில் இந்த முறையில் தாளித்து விட்டால் போதும்.

சுட சுட சாதத்தில் இந்த மோர் ஊற்றி பிசைந்து, வத்தல், அப்பளம், வடாம் ஏதாவது தொட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். அடிக்கிற வெயிலுக்கு இந்த மோர் குழம்பு சாதம் நமக்கு ரொம்பவும் இதமாக இருக்கும்.

சட்டுனு 5 நிமிடத்தில் ஒரு மோர் குழம்பு

வயிற்றுக்கு குளிர்ச்சியையும் தரும். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

தேங்காய் சேர்க்காத மோர் குழம்பு செய்முறை: உங்க வீட்ல மோர் இருந்தாலும் அதை நேரடியாக எடுத்து இந்த ரெசிபி செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.

இல்லை கட்டித் தயிர் தான் இருக்கிறதா. அந்த கட்டித் தயிரை தேவையான அளவு ஒரு பெரிய குண்டானில் போட்டுக் கொள்ளுங்கள்.

இதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி ஒரு மத்தை வைத்து கடைந்தால் சூப்பரான கட்டிகள் இல்லாத மோர் நமக்கு கிடைத்திருக்கும்.

தயாராக மோரை கடைந்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும். இந்த மோர் குழம்பை புளித்த மோரில் தான் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் – 2 ஸ்பூன் ஊற்றி காய்ந்ததும், கடுகு – 1/2 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், வெந்தயம் – 1/2 ஸ்பூன், போட்டு

தாளித்து இஞ்சி துருவல் – 1/2 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 சிட்டிகை, நறுக்கிய சின்ன வெங்காயம் – 2 பல், பச்சை மிளகாய் – 1 நறுக்கியது, வரமிளகாய் – 2

கிள்ளியது, கருவேப்பிலை – 2 கொத்து, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு கருகாமல் வறுக்க வேண்டும். இறுதியாக இதில் நிறத்திற்கு, சுவைக்கு 1/4 ஸ்பூனுக்கும் குறைவாக – மிளகாய்த்தூள் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து விட்டு உடனடியாக கரைத்து

சட்டுனு 5 நிமிடத்தில் ஒரு மோர் குழம்பு

வைத்திருக்கும் மோரை இதில் ஊற்றிக் கொள்ளுங்கள். (மிளகாய் தூள் போட விருப்பமில்லை என்றால் அதை தவிர்த்துக் கொள்ளலாம் அது உங்களுடைய விருப்பம் தான்.)

அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு மோரை ஊற்ற வேண்டும். மோர் கொதித்து வரக் கூடாது. லேசாக சூடாகி வரும்போது தேவையான அளவு உப்பு போட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். –

– அவ்வளவுதான். தேவைப்பட்டால் இதன் மேலே கொத்தமல்லி தழை தூவி இந்த மோரை சுடச்சுட இருக்கும்போதே, சுட சுட சாதத்தில் விட்டு பிசைந்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு அருமையாக இருக்கும்.

சில பேர் இதை மோர் குழம்பு என்று சொல்ல மாட்டார்கள். மோர் தாளித்தது என்று சொல்லுவார்கள். இந்த மோர் குழம்பை குறிப்பாக தேங்காய் எண்ணெயில் செய்தால் மிகவும் அருமையான ருசியில் இருக்கும்.

இந்த மோர் குழம்பில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தாளிக்கும்போது, ஒவ்வொரு பொருட்களாக போட்டு கவனமாக தாளிக்க வேண்டும்.

இறுதியாகத்தான் மஞ்சள் தூள், சேர்த்து மிளகாய் தூள் சேர்த்து அந்த பொருட்களை எல்லாம் கருகவிடாமல் மோர் ஊற்ற வேண்டும்.

தாளிப்பில் லேசாக கருகிய வாடை வீசினாலும் அந்த வாசம் இந்த மோர் குழம்பில் வீசும்.

சுவை நன்றாக இருக்காது. அருமையான ஆரோக்கியம் தரும் சுவை தரும் இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மறக்காம இந்த சம்மர்ல ட்ரை பண்ணி பாருங்க.