சஜித் பிரேமதாசவுக்கு அர்ச்சுனா பரப்புரை

சஜித் பிரேமதாசவுக்கு அர்ச்சுனா பரப்புரை
Spread the love

சஜித் பிரேமதாசவுக்கு அர்ச்சுனா பரப்புரை

சஜித் பிரேமதாசவுக்கு அர்ச்சுனா பரப்புரை ,யாழ்ப்பாணத்தில் நடக்க இருக்கும் மதிப்புக்குரிய எதிர்கால ஜனாதிபதி சஜித் பிரேமதாச அவர்களின் பரப்புரைகள் சகலவற்றையும் தோழி உமாச்சந்திர பிரகாஷ் மட்டுமே கவனித்துக் கொள்வார் அதில் எனது பங்கு சிற்றளவும் இருக்காது என நினைக்கிறேன்.


அவர் சஜித் பிரேமதாஸ் அவர்களின் பிரதிநிதியாக விடும் கருத்துக்களை ஒரு நொடியில் தவிடு பொடியாக்க என்னிடம் தாராளமான தொலைபேசி உரையாடல்கள் உள்ளன.


அவர்களின் குப்பாடி அரசியல் சஜித் பிரேமதாஸ் அவர்களின் வாக்குகளை சிதறடிக்கும் என்பதை தெளிவாக பிரேமதாஸ் அவர்களுடன் சொல்லி உள்ளேன்.


மேலும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தோழி உமா சந்திர பிரகாஷ் சாவகச்சேரி தொகுதியில் கேட்க இருப்பது கூட அவர் எனக்கு எதிராக பொழிகின்ற கருத்துகளுக்கு காரணமாகும்.


நான் அரசியல் செய்வதற்காக அரசியலுக்கு வந்தவன் அல்ல..
ஒரு சாதாரண வைத்திய நிர்வாகியாக ஒரு பொது மக்களின் நலனுக்காக உண்மைகளை வெளி கொண்டு வந்த போது சகல அரசியலும் என் குரல்வலையை நெருக்கியது..


ஆதலால் அரசியலை கையில் எடுத்து அவற்றுக்கான பதிலை சொல்லலாம் என எண்ணியது தவிர எப்போதுமே ஒரு அரசியல்வாதியாக இருக்க வேண்டிய தேவை எனக்கு இருக்கவில்லை..


இருந்திருந்தால் இவ்வளவு குறுகிய காலத்தில் எம்பிபிஎஸ், இரண்டு மாஸ்டர், மூன்று டிப்ளமோ எல் எல் பி எல் எல் எம் செய்ய வேண்டிய தேவை இராமநாதன் அர்ச்சுனா வுக்கு இருந்திருக்காது என்பதை உமா சந்திர பிரகாஷ் போன்ற அரசியல் வந்து உழைக்க நினைக்கின்ற தோழிகள் விளங்கிக் கொள்ள வேண்டும்..


தங்களின் அறிவு மிகவும் கீழ்த்தரமானது என்பதை ஒட்டி நான் மிகவும் வருத்தம் அடைகிறேன்..


தோழி நீங்கள் சாவகச்சேரியில் தானே வாக்கு கேட்க போகிறீர்கள் பாராளுமன்றத் தேர்தலில் அப்போது நாங்கள் சந்தித்துக் கொள்வோம்..
எனக்கும் எதிர்கால ஜனாதிபதி சஜித் பிரேமதாஸ் அவர்களுக்கும் இடையான உரையாடல் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை அதை பொது வழியில் சொல்லும் அளவுக்கு நான் கேவலமானவனும் இல்லை..


தோழி உமா சந்திர பிரகாஷ் அவர்கள் யாழ்ப்பாணத்தில் வெறும் ஆயிரம் வாக்குகளை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு குப்பாடி அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது..


உமா சந்திர பிரகாஷின் இவ்வாறான சுயநலமான கருத்துக்கள்
எமது எதிர்கால ஜனாதிபதி சஜித் பிரேமதாஸ் அவர்களுக்கு பாதகமாக அமையும் எனவும் எனது ஆதரவானது இந்த காட்சி சார்பாக அற்றதும் ஆகும்.
நான் நினைக்கிறேன்

தற்போதுள்ள நிலைமையில் தமிழர்களுக்கு உரிய அடிப்படை சுய நிர்ணய உரிமைகளை கதைத்து கருத்துக்களை முன்வைக்கக்கூடிய ஒரே ஒரு ஜனாதிபதியாக சஜித் பிரேமதாசா அவர்களை அவர்களுடைய தந்தையாரின் வரலாறுகளில் இருந்து தேர்ந்தெடுத்துக் கொண்டது மட்டுமே ஆகும்..


நேற்றைய மேடையில் ஒரு தமிழன் இருக்கக் கூடாது என அவர்கள் கருத்தில் கொண்ட போது நானாகவே கீழ் இறங்கி சென்றேன்..


அவ்வாறு சென்றது எமது எதிர்கால ஜனாதிபதி சஜித் பிரேமதாஸ் அவர்களின் நீங்கள் வடக்கிற்கு செல்லுங்கள் நாங்கள் அங்கே எல்லாவற்றையும் செய்வோம் என கூறப்பட்ட காரணத்தில் ஆகும்..


நான் வடக்கிக்கு வருவது உமா சந்திர பிரகாஷின் எதிர்கால பாராளுமன்றத் தேர்தல் நிலையை நிச்சயமாக சிதறி போக செய்யும் என்பதில் அவர் கருத்துக் கொண்டிருப்பது உண்மைதான்…


உமா சந்திர பிரகாஷ் தனது வாக்கு வங்கி என நினைத்துக் கொண்டிருக்கும் சாவகச்சேரி எனது இதயம்..


சாவடி சேரி வைத்தியசாலைக்காக தான் முதன் முதலில் எனது வேலையை திறந்து மக்களால் தடுக்கப்பட்ட ரீதியில் சுகாதார அமைச்சின் குழுக்கள் நான் விழுந்து கொழும்பு சென்றேன் கதைப்பதற்காக..


இப்போது கூட அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அவர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பிக்கு காரணம் முறையற்ற முறையில் எனக்கு எதிராக செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் நடவடிக்கைகளுக்கு துணை போனதுக்கு மட்டுமே ஆகும்..


எனது சுயலாபத்திற்காக இவற்றையெல்லாம் செய்கிறேன் என சொல்பவர்கள் முடியுமானால் உங்கள் தொழிலை பணயம் வைத்து உங்கள் உயிரை பணயம் வைத்து பொதுமக்களுக்காக ஒரு நன்மையேனும் செய்வதற்கு முன் வாருங்கள்..


எனது மருத்துவ கனவு எனது மருத்துவ நிர்வாக கனவு எனது குடும்பம் எல்லாவற்றையும் அடகு வைத்து பொதுமக்களின் நலன் கருதி நான் ஒரு தனி ஆளாக இந்த போராட்டத்துக்கு நின்ற போது எனக்கு பின்னால் நின்றது சாவகச்சேரி மக்கள் மட்டுமே..


நான் மன்னார் பொது வைத்தியசாலை போனது ஒரு அரசியலாக இருந்திருந்தால் நான் சிறை சென்ற பின்பு வந்து தனி அரசியல் மன்னாரில் செய்திருப்பேன்..


ஒவ்வொரு மன நோயாளர்களும் அதன் பின்பு அந்த சிந்துஜாவின் குடும்பத்தை சிதைக்கின்ற போது நான் மௌனமாகி போனதற்கு காரணம் இதில் அரசியல் புகுந்து விடக்கூடாது என்பதற்காக மட்டுமே..
ஒரு மனச் சுத்தியான எந்த நபரும் சிந்துஜாவின் குடும்பத்தின் பின்னால் நிற்கவில்லை..


எல்லாருக்கும் ஒரு தேவை இருந்தது..
கடைசியில் அன்பு தம்பி சுதன் மரியராஜையும் இழந்திருக்கிறோம்..
மருத்துவ குறைகேடுகளுக்கான எனது போராட்டம் கடைசியில் அரசியல் மயமாக்கப்பட்டு

இப்போது பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளாகி வெற்றிகரமாக மழுங்கடிக்கப்பட்ட போதும் இன்றிலிருந்து ஜனாதிபதி தேர்தல் சார்ந்த அரசியலுக்கு எமது மதிப்புமிகு எதிர்கால ஜனாதிபதி சஜித் பிரேமதாஸ் அவர்களை நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட காரணம்

அவர் முஸ்லிம் தமிழ் மக்களின் விருப்பு வாக்குகளை ஒரு கருத்தில் கொண்ட ஒரு ஜனாதிபதி என்பது மட்டுமே ஆகும்…
எது எப்படியோ உமா சந்திர பிரகாஷ் போன்றவர்கள் தனி சுயநல அரசியல் செய்பவர்கள்..


நான் தமிழன் அரசியலை செய்பவன்..
நான் நிரந்தரமாக சிறைக்கு சென்றாலும் என்றொரு நாள் காணாமல் ஆக்கப்பட்டாலும் எனது இறுதி மூச்சு உள்ளவரை தேசியம் எனது கொள்கை மேதகு எனது தலைவன்..


எனது தமிழ் உறவுகளுக்காக நான் நாளை மரணித்தால் கூட ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நான் ஒரு தமிழனுக்கு பிறந்தவன்.. முஸ்லிம் சிங்கள சமுதாயங்களை சகோதரர்களாக நினைத்து வாழ்ந்தவன்..
என் இறுதி மூச்சுக்காற்று வரை என் தமிழினத்திற்கு துரோகம் செய்ய நினைக்காதவன்..


டீல் என்று நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் உங்களுக்கு ஒரு வார்த்தையாக போனாலும் எந்த சுயநலமும் இல்லாமல் தமிழனுக்காக வாழத் துடித்தவனின் ஒவ்வொரு ரத்தத்தை குடிக்கும் கொசுக்கள் ஆகவே நான் பார்க்கிறேன்.


உங்களால் முடிந்தால் நான் இன்று வரை செய்தவற்றை தனியாக செய்து பாருங்கள்..


இப்படிக்கு
வைத்திய கலாநிதி இராமநாதன் அர்ச்சுனா , என முகநூலில் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .