சசிகுமாருக்கு அறிவுரை சொன்ன ரஜினி

Spread the love

சசிகுமாருக்கு அறிவுரை சொன்ன ரஜினி

எம்.ஜி.ஆர்.மகன் படத்தை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ராஜவம்சம் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

சசிகுமாருக்கு அறிவுரை சொன்ன ரஜினி
சசிகுமார் – ரஜினி


சசிகுமார் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ராஜவம்சம்’. இப்படத்தில் நிக்கி கல்ராணி

கதாநாயகியாக நடித்து இருக்கிறார். கதிர்வேல் இயக்கியிருக்கும் இப்படத்தில் 49 நடிகர்கள்

நடித்துள்ளனர். இப்படத்தின் விழாவின் சசிகுமார் பேசும்போது, ‘இந்த கூட்டுக்குடும்பம்

சம்பந்தப்பட்ட படத்தைக் கதிர் என்னிடம் கூறினார். மிகவும் பிடித்திருந்தது. நானும் கூட்டு

குடும்பத்தில் வாழ்ந்து இருக்கிறேன், வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

சசிகுமார்

இப்படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் சித்தார்த்

அனைவரையும் அழகாக கேமராவில் காட்டியுள்ளார். எடிட்டர் சாபு ஜோசப் இப்படத்தில்

பணிபுரிந்ததில் மகிழ்ச்சி. சாம் சி எஸ் பின்னணி இசை மிகப்பெரிய பலம். இப்படத்திற்கு

இன்னொரு மிகப்பெரிய பலம் தயாரிப்பாளர் டி.டி.ராஜா சார். ரஜினி சார் பேட்ட படத்தில் எனக்கு

ஒரு அட்வைஸ் கொடுத்தார். படத்தைத் தயாரிக்க மட்டும் வேண்டாம் என்றார். எதற்குச்

சொல்கிறேன் என்றால் அதில் அவ்வளவு சிரமமும் பொறுமையும் திறமை வேண்டும் என்று அவர் சொன்னார்’ என்றார்.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply