என்னை கொன்றிடு ….!
துயர் ஒன்று வந்தென்னை துண்டாடுதே
தூளாக்கி மனம் வீச பந்தாடுதே ….
வீசும் புயலாகி வலியாடுதே
விழியோடி மழையாகி குளிப்பாட்டுதே
கரை காண முடியாத கடலாகுதே – இறுதி
கல்லறை தேடும் முடிவாகுதே ….
வாலிப தவறொன்று இடியாகுதே
வான்வழி மின்னல் பொறியாகுதே….
கேள்விக்கு பதிலின்றி மனம் வாடுதே
கேலிக்கையாகி வாழ்வோடுதே …..
சதியென்று புதிராடி உறவாடுதே
சாவதை தேடியே மனம் ஓடுதே ….
இதுவென்ன வாழ்வா மனம் பேசுதே
இனியென்ன வாழ்வோ உயிர் கூசுதே
கண்ணீர்க்கு சொந்தம் யாரானதோ ..?
கை கூப்பி கும்பிட்டேன் எனை கொன்றிடு ….!
வன்னி மைந்தன் – (ஜெகன்-T )
ஆக்கம் -03,05,2017