கொக்கிளாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு மாகாணம் முழுமையாக முடக்கம்
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முல்லைத்தீவு, கொக்கிளாயில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பான அகழ்வு மற்றும் நீதி கோரி விடுக்கப்பட்ட முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
குறித்த கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வடக்கின் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்கள் முடங்கின.
கொக்கிளாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு மாகாணம் முழுமையாக முடக்கம்
மருந்தகங்கள், உணவங்கள் தவிர ஏனைய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததுடன், போக்குவரத்து சேவையும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
பாடசாலைகளுக்கு மாணவர்கள் பெரியளவில் சமூகமளிக்காமையால் பல பாடசாலைகள் இயங்கவில்லை.