கைதானவர் மரணம் விசாரணைகள் ஆரம்பம்

ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்
Spread the love

கைதானவர் மரணம் விசாரணைகள் ஆரம்பம்

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த நபர், நேற்று முன்தினம் நாரஹேன்பிட்டி பகுதியில் வைத்து 15 கிராம் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதானவர் மரணம் விசாரணைகள் ஆரம்பம்

இந்த நிலையில், பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்து மருதானை பகுதியில் வைத்து சந்தேக நபர் தப்பிச்செல்ல முயற்சித்தபோது, காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்தாக பொலிஸார் கூறியுள்ளனர்.

நாரஹேன்பிட்டி தொழிற்பயிற்சி அதிகாரசபையின் உதவி முகாமையாளராக பணியாற்றிய,
ஹிக்கடுவை பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான ஒருவரே உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

No posts found.