கைஉழவு இயந்திரத்தில் பேருந்து மோதிவிபத்து

கைஉழவு இயந்திரத்தில் பேருந்து மோதிவிபத்து
Spread the love

கைஉழவு இயந்திரத்தில் பேருந்து மோதிவிபத்து

கைஉழவு இயந்திரத்தில் பேருந்து மோதிவிபத்து ,சிலாபம் – புத்தளம் பிரதான வீதியின் ஜயபிம பகுதியில் பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த கை

உழவு இயந்திரத்தின் பின்புறத்தில் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (22) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேருந்தின் சாரதி கைது

கிரிபாவ பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, அனுராதபுரம் – ரம்பேவ பிரதான வீதியின் பரசன்கஸ்வெவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்திசையில் பயணித்த லொறியுடன் மோதிய விபத்தில் 57 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட – தம்வெல்மிட்டிய வீதியில் லஹினகல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று பாதசாரிகள் மீது மோதிய விபத்தில் 73 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.