குளத்தில் மூழ்கிய மாணவன்

குளத்தில் மூழ்கிய மாணவன்
Spread the love

குளத்தில் மூழ்கிய மாணவன்

இரணைமடு குளத்தில் மூழ்கிய மாணவன் ,கிளிநொச்சி இரணைமடு நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து , குளத்தில் நீராட சென்ற இந்த மாணவனே திடீரென நீரில் மூழ்கி காணாமல் போய் உள்ளார் .

அவ்வாறு காணாமல் போனவரை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் கடற்படையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

சுழியோடிகள் உதவியுடன் காணாமல் போன அந்த மாணவனை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ,அவர்கள் களமிறங்கியிருக்கின்றனர் .

திருமுருகண்டி இந்து வித்யாலத்தில் தரம் ஒன்பதில் கல்வி கற்று வரும் 14 வயதுடைய மாணவனை இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது சகோதரர் நண்பர்களுடன் நீராட சென்ற பொழுதும் அவர்கள் தப்பித்துக் கொண்டனர் , அதே வேளை நீரில் மூழ்கிய தனது சகோதரனை காப்பாற்ற முடியாமல் அவர்கள் தத்தளித்து வந்துள்ளனர் .

குளத்தில் இவ்வாறு நீரில் மூழ்கி பலர் பல ஆண்டுகளாக பலியாகி வருகின்றனர்.

அதனுடைய ஆபத்தினை உணராமல் நீராடா செல்லுகின்றவர்களை இவ்வாறு பலியாகி வருகின்றனர் .

அடித்து பாயும் வெள்ளத்தில் நீராட சென்றதன் விளைவு ,அந்த நீரிழிவுகள் அடித்துச் செல்லப்பட காரணமாக இருந்திருக்க கூடும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது .

காணாமல் போன மாணவனுடைய சடலத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில், உதவியுடன் தேடுதல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.