குண்டு வெடிப்பில் எரியும் கட்டடம்
உக்ரைனில் குண்டு வெடிப்பில் எரியும் கட்டடம் . ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் முக்கிய சட்டத்துறை கட்டடம் எரிந்த வண்ணம் உள்ளது .
ரஷ்யா நீண்ட தூர ஏவுகணைகளை பயன் படுத்தி உக்ரைன் ஆளுகை பகுதியான ,ஒடிசா பகுதியை இலக்கு வைத்து கடும் தாக்குதலை நடத்தியது .
இந்த தாக்குதலில் உக்ரைனின் சட்டத்துறை கட்டடம் முழுமையாக பாதிக்க பட்டுள்ளது .
அந்த கட்டடத்தின் கூரைகள் எரிந்து விழும் காட்சிகள் காணபடுகின்றன .
ரஷ்யா உக்ரைன் போர்
இரண்டு ஆண்டுகள் கடந்து மூன்றாவது ஆண்டுக்குள் ,உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையிலான யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இந்த போரில் உக்ரைன் உள் கட்டமைப்புக்கள் பலமாக பாதிக்க பட்டுள்ளன .மின்சார மையங்கள் ,நீர் நிலைகள் ,மற்றும் வர்த்தக முக்கிய கேந்திர பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளன ,.
அவ்வாறு இன்று இடம்பெற்ற இந்த சட்டத்துறை கட்டடம் மீது நடத்த பட்ட தாக்குதலில் ,ஐந்து பேர் பலியாகியும் ,24 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
அவ்விதம் காயமடைந்தவர்கள் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .