குண்டு வீட்டிலிருந்து மீட்பு

குண்டு வீட்டிலிருந்து மீட்பு
Spread the love

குண்டு வீட்டிலிருந்து மீட்பு

குண்டு வீட்டிலிருந்து மீட்பு ,குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்றினால் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள

உலகக்குழு உறுப்பினரின் வீட்டிற்குப் பின்னால் புதைக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு மற்றும் 310 கிராம் போதைப்பொருள் என்பவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று கடந்த 29ஆம் திகதி டுபாயில் இருந்து இந்த சந்தேக நபரை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளனர்.

இந்த சந்தேக நபர் மத்துகம பிரதேசத்தில் பெண் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் மற்றும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.