கிழக்கு ஆளுநர் கடமை பொறுப்பேற்பு

கிழக்கு ஆளுநர் கடமை பொறுப்பேற்பு
Spread the love

கிழக்கு ஆளுநர் கடமை பொறுப்பேற்பு

கிழக்கு ஆளுநர் கடமை பொறுப்பேற்பு ,கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்த லால் ரத்னசேகர திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் வியாழக்கிழமை (26) அன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பேராசிரியரான ஆளுனரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2017 பெப்ரவரி முதல் நவம்பர் 2023 வரை செயற்பட்டுள்ள இவர் கந்தளாய் அக்ரபோதி வித்தியாலய பழைய மாணவருமாவார்.

குறித்த நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி எஸ் ரத்நாயக்க, ஆளுனர் செயலக செயலாளர் எல்.பி மதநாயக்க, மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண திணைக்கள தலைவர்கள் , தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் அருண் ஹேமச்சந்திர மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.