கிராம சேவகர் கைது

கிராம சேவகர் கைது
Spread the love

கிராம சேவகர் சிக்கினார்

லஞ்சம் பெற்ற கிராம சேவகர் கைது ,இலங்கையில் பெண் ஒருவரிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கிராம சேவகர் ஒருவரை கைது செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு ஆணை குழு தெரிவித்துள்ளது . .

குறித்த கிராமத்தில் வசித்து வந்த பெண் தனது வீட்டுக்கு மின்சாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக அனுமதியினை பெற்று கொள்வதற்காக கிராம சேவகருக்கு 25 ஆயிரம் ரூபாய்கள் இலஞ்சமாக வழங்கியுள்ளார் .

லஞ்சம் வழங்கிய பெண்

இவ்வாறு லஞ்சம் வழங்கியதை தெரிவித்ததை அடுத்து லஞ்ச ஒழிப்பு திணைக்களத்தினர் அங்கு வருகை தந்து கிராம சேவை ஊழியரை கைது செய்தனர் .

குறித்த பெண் தனிப்பட்ட ரீதியில் தாக்குதலை நடத்தும் முகமாக இவ்வாறு கிராம சேவகரை திட்டமிட்டு மாட்டி விட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .

இலங்கையில் லஞ்ச ஊழல் அதிகரித்து காணப்படுவதும் அதனூடாக இவ்வாறான அதிகாரிகள் தொடராக கைது செய்யப்பட்ட வருவதும் லஞ்ச ஊழலில் ஊறி போய் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கிராம சேவகர்கள் இவ்வாறு லஞ்சம் பெற்று பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருவது இதன் ஊடாக மீளவும் அம்பலப்பட்டுள்ளது .

கிராம சேவகரை காட்டிக் கொடுத்த பெண்

குறித்த கிராம சேவகரை காட்டிக் கொடுத்த பெண்ணுக்கு எதிராக அந்த கிராமத்தில் பலர் புகார்களை எழுப்பி வருகின்றனர்.

எதிர் வரும் காலங்களில் பெண் மீது தாக்குதல் அல்லது வன்முறை சம்பவங்கள் மேற்கொள்ள கூடும் என்கின்ற அச்சமும் வெளியிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட கிராம சேவகர் தற்பொழுது விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார் .

விசாரணை முடிவில் கிராம சேவகர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.