காற்றுள்ள போதே தூற்று
நாளை என்ற நாள் மறந்து
நாடி வா இன்றெழுந்து …
ஊர் எழுந்து ஆட முன்னே
ஊர் புகுவோம் ஓடிவா ….
மஞ்சள் வெயில் உடல் தழுவ
மார்கழி போல் உறங்குவோம் ….
மணித்துளிகள் ஒவ்வொன்றிலும்
மயக்கும் இன்பம் ஏற்றுவோம் …
காலங்களை வீணடித்து
கழிக்கின்ற காலம் எல்லாம் …..
நாளையதில் மீண்டுமது
நாடி வர எண்ணி விடு ….
உள்ளமதில் வலியில்லா
உடல் பலம் உள்ளவரை …..
வேண்டியதை புரியவேண்டும்
வேளை இதில் கூட வேண்டும் ….
நோயுடலில் ஆசை வந்து
நொந்து மனம் சாவதுவோ …?
முந்தி வரும் நோயின் முன்னே
முடித்து விடு வேண்டுதலை …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -08/01/2018
வன்னி மைந்தன் கவிதைகள்