கார்த்திகை இருபத்தாறுக்கு முதல் வணக்கம்.

கார்த்திகை இருபத்தாறுக்கு முதல் வணக்கம்.
Spread the love

கார்த்திகை இருபத்தாறுக்கு முதல் வணக்கம்.

முடிந்தால்
என் கவிதைகளையும்
இன்று இணைத்துக் கொள்ளுங்கள்
மிக்க நன்றி
அருள்நிலா வாசன் 🙏
தூண்டா மணிவிளக்காய்
ஆண்டாண்டு தோறும்
எரிகின்ற தீபத்தின் முன்
அண்ணாவின் குரல் ஒலிக்கும்

இன்று
வேண்டாத துயரை
விலத்தியே வைத்து நாம்
வீட்டிற்குள் வணங்குகின்றோம்

வரிக்குள் அடங்காத வலிகளை நாம்
வார்த்தைக்குள் ஒழித்து வைப்போம்

அடிமைகளா நாம் என்று மனம் அடிக்கடி எம்மைக்கேட்டாலும்
துடிக்கின்ற இதயத்தில்
வழிகின்ற குருதியும்
உடல் முழுவதும்
அண்ணாவின் பெயர்
எழுதும்

சிலிர்த்திடும் வேங்கையின் சிந்தனையில் சிக்குண்டு தவிப்பவர் நெஞ்சங்களில்
தீக்குச்சியாய் என்றும்
நீர் இருப்பீர்

வணங்கா மண்ணுக்காய்
அன்று கடலோரக் கவிதைகளாய்
காத்துக் கிடந்து
காய்ந்த
மக்களின் கண்ணீரை
இன்று
பிரபா கரத்தால்
நீர் துடைப்பீர்

காயாத விழிகளில்
கரையோரக் காட்சியாய்
நீர் அங்கு தோன்றினால்
உலகமே வியக்கும்
சிலருக்கு வியர்க்கும்

பாதையெல்லாம்
பூமலராய்
கார்த்திகை தந்த
செம்மலராய்
பூங்கதவே நீ
தாழ் திறவாய்

எழுவது இன்று
மேதகு என்று
தொழுவது நன்று

அகவை ஒன்று
நகர்ந்தது என்று
ஆர்பரிக்கின்றது
மக்கள் கூட்டம்
கடலாய் நின்று

பிறந்த நாள் வாழ்த்துகள்
26/11/2024