காதலே பதில் சொல்லு

Spread the love

காதலே பதில் சொல்லு

கொஞ்சி கொஞ்சி பேசும் பூவே
கொஞ்சம் வாராயா – நான்
கொஞ்சி பேசி கொஞ்சம் தழுவ
கொஞ்சம் தாராயா …?

ஆசை வைத்தால் அஞ்சுதல் பிழையே
அன்பே புரிவாயா ..? – நாள்
ஆர தழுவி ஆயுள் கழிக்க
அச்சம் தொலைப்பாயா ..? ….

விழிகள் பேசும் மொழிகளை எல்லாம்
விலைகள் பேசிடவா ..? – நான்
விரும்பி நோக்கும் நிலவே உன்னை
விரைவாய் பெற்றிடவா …?

இது நாள் வரையில் உன்னை தடவி
இனிமை கண்ட காற்று ….
இனியும் உன்னை விட்டு தொலைய
இதயம் இடுவாய் நாற்று ….

எது நாள் வரையில் பொறுமை காப்பேன்
ஏங்கும் கிளியே கூறாய்- என்
எண்ணம் புகுந்த ஒளியே உன்னை
என்று தருவாய் மொழிவாய் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -01/01/2018

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply