காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணி

காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணி
Spread the love

காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணி

காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணி ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் உறுமய 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை

வழங்கும் பணிகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு பொதுமக்கள் தமது ஆவனங்களை வழங்கி உறுதிகளைப்பெற்றுக்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் வேண்டுகோள் விடுத்தார்.

ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் உறுமய திட்டத்தினை விரைவில்

நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயும் விசேட கூட்டம் இன்று (11) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர்களுமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்

வியாழேந்திரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக காணிக்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ந.முகுந்தன்,காணி பிரிவிற்கான பணிப்பாளர்

திருமதி கு.ஈஸ்பரன் மற்றும் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள்,நில அளவை திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் உறுமய திட்டத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டது.

இந்த திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 27,595 உறுதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்காக முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

அதிகாரிகள் மட்டத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினை

குறிப்பாக இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக அதிகாரிகள் மட்டத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் அவற்றினை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் தீர்ப்பதற்கான வழிகள் குறித்தும் ஆராயப்பட்டது.

இந்த திட்டத்தினை விரைவில் நினைவுசெய்து மக்களுக்கான உறுதிகளை வழங்க நடடிவக்கைகள் எடுக்குமாறு இங்கு அதிகாரிகளுக்கு பணிப்புரைகள் விடுக்கப்பட்டன.