காணாமல் போன 13 வயது சிறுமி – பற்றைக்குள் சடலமாக மீட்பு

இதனை SHARE பண்ணுங்க

காணாமல் போன 13 வயது சிறுமி – பற்றைக்குள் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின்புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு கிராமத்தினை சேர்ந்த 13 அகவை சிறுமி கடந்த 15 ஆம் முதல் காணவில்லை என புதுக்குடியிருப்பு

பொலிஸ் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த சிறுமி இன்று (15) மூங்கிலாறு 200 வீட்டுத்திட்டம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் சடலமாக இனம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி வருகைதந்து பார்வையிட்டு சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

உயிரிழந்த சிறுமி தொடர்பில் மேலும் தெரியவருகையில், 13 அகவையுடைய குறித்த சிறுமி மூங்கிலாறு வடக்கு உடையார் கட்டில் வசிக்கின்றார் இந்த சிறுமி திருகோணமலையில் விடுதியில்

தங்கி நின்று படிப்பதாகவும் காணாமல் போவதற்கு இரண்டு நாட்களுக்க முன்னர்தான் வீட்டிற்கு வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மூங்கிலாறு வடக்கு 200 வீட்டுத்திட்ட தனியார் பற்றைக்காணி ஒன்றில் இருந்தே குறித்த சடலம் இன்று இனங்காணப்பட்டுள்ளது.

சடலம் காணப்பட்ட இடத்துக்கும் இவரின் வீட்டிற்கும் இடைப்பட்ட தூரம் 400 மீற்றர் வரையிலேயே

காணப்படுகிறது சிறுமியின் உடலத்தினை அயல் வீட்டவர்கள் கோழியினை காணவில்லை என தேடி சென்றபோதே அடையாளம் காட்டியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


    இதனை SHARE பண்ணுங்க

    Author: நலன் விரும்பி

    Leave a Reply