காட்டில் மறைந்திருந்த மர்ம மனிதன்

இதனை SHARE பண்ணுங்க

காட்டில் மறைந்திருந்த மர்ம மனிதன்

பல கொலைகளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் யால காட்டில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல வருடங்களாக யால காட்டில் தலைமறைவாக இருந்த இவர் கொலைகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஜூலை மாதம் கதிர்காமம் வீதியில் இந்து மதகுரு ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உட்பட கதிர்காமம் பகுதியில் அண்மைக் காலமாக இடம்பெற்ற பல கொலைகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களின் பிரதான சந்தேகநபராக இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் யால காட்டில் வன விலங்குகளை வேட்டையாடி பாரியளவிலான சட்டவிரோத இறைச்சி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தமையும் தெரியவந்துள்ளது.


இதனை SHARE பண்ணுங்க

Author: நலன் விரும்பி

Leave a Reply