கழிவறைக்கு சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

கழிவறைக்கு சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு
Spread the love

கழிவறைக்கு சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

பாடசாலை மைதானத்தில் இருந்த கொங்கிரீட் அமைப்பு ஒன்று விழுந்ததில் பலத்த காயமடைந்த பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மஸ்கெலிய காட்மோர் தோட்டத்தில் வசிக்கும் அந்தப் பாடசாலையில் 6 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் எஸ். அனிஷான் என்ற 11 வயது மாணவனே இந்த அசம்பாவிதத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பாடசாலை மாணவன் தனது நண்பர்கள் இருவருடன் இன்று (04) பிற்பகல் 1.30 மணி அளவில் கழிவறைக்குச் செல்ல வந்த போதே இவ்விபத்தில் சிக்கியுள்ளார்.

பாடசாலை மைதானத்தில் இருந்த கொங்கிரீட் அமைப்பு மாணவனின் உடல் மீது உருண்டுவந்து விழுந்ததில் மாணவன் கழிவறை சுவரில் சிக்கி பலத்த காயம் அடைந்தார்.

பின்னர் பாடசாலையின் ஆசிரியர்களும் அயலவர்களும் ஒன்றிணைந்து காயமடைந்த மாணவனை அம்புலன்ஸ் மூலம் மஸ்கெலிய பிராந்திய வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

சம்பவம் தொடர்பில் மஸ்கெலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தேயிலை தோட்டம் ஒன்றின் அபிவிருத்தி நோக்கத்திற்காக குறித்த கொங்கிரீட் அமைப்பு கொண்டுவரப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.