கல்லறை சாயும் காதல்
கண்ணீர் இல்லா காதல் ஒன்றை
கண்ணே கண்ணே காட்டு ….
கரங்கள் கூப்பி கடவுளிடம் கேட்டேன்
கண்ணீர் விட்டான் காணு …
இது நாள் வரையில் அழுதிடா காதல்
இவ் வையம் எங்கும் இல்ல …
இருந்தால் காட்டு இரு கரம் கூப்பி
இன்றே வணக்கம் இடுவேன் ….
உண்மையாய் காதல் கொண்டார் – நெஞ்சின்
உள்ளே அழுகின்றார் …
உள்ளே அழுது வெளியே நடித்து
உலவி திரிகின்றார் ….
நினைத்தது யாரோ மணந்தது யாரோ
இது தான் வாழ்வாச்சு ….
இதை எல்லாம் எண்ணி- அழுதே
வாழ்தல் வாழ்வின் விதியாச்சு …..
உள்ள பிழையை உறங்கு முன் அறிந்தால்
உலகே உன்னை மதிக்கும் …..
கால பிழையால் கசங்கும் காதல்
கல்லறை தானே தேடும் …!
வன்னி மைந்தன் -(ஜெகன்- T )
ஆக்கம் -04/08/2017
வன்னி மைந்தன் கவிதைகள்