கலங்காதே ஓடு

கலங்காதே ஓடு
Spread the love

கலங்காதே ஓடு

ஏது செய்தாய் என்று இல்லை
எதையும் செய்யடா
எழுந்து வர வேண்டும் என்றால்
ஏற்று செய்யடா

போகும் பாதை பள்ளம் தான்
பொறுத்து கொள்ளடா
பொற்காலம் அமைக்க
போராடு சோராதடா

இழிந்தவர் இழியட்டும்
இன்றே விட்டு தள்ளடா
இன்றே உன்னை நம்பு
இறைவன் தருவான் தென்பு

சிந்தை கொஞ்சம் செதுக்கி
சிகரம் ஏறடா
அறியா விடயங்களை
அறிந்து கொள்ள முனையடா

பாதை வரும் தன்னால
பகை ஓடும் முன்னால
சோராத சோராத போராடு
சோற்றுக்காய் இப்போ ஓடு

நாளை உன்னை பாரும் வணங்கும்
நகலடித்து உனை பாடும்
இது தாண்டா வளர்ச்சி – பாரு
இன்று பெற்றாய் புகழ்ச்சி .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 14-05-2023