கமாஸ் தளபதி படுகொலை

கமாஸ் தளபதி படுகொலை
Spread the love

இஸ்ரேல் தாக்குதலில் தளபதி படுகொலை

கமாஸ் தளபதி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் உளவுத்துறை மொஸாட் திடீரென அறிவித்துள்ளது.

சிரியாவின் ரகசிய முகாமில் பணியாற்றிக் கொண்டிருந்த கமாஸ் தளபதிகளை இலக்கு வைத்து இஸ்ரேலுடைய உளவு விமானங்கள் தாக்குதலை நடத்தின.

இந்த ஆளில்லாத உளவு விமானங்கள் நடத்திய திடீர்தாக்குதலில் அந்த முகாம் பற்றி எரிந்து சேதமானது .

இதன் பொழுது அங்கு தரித்திருந்த கமாஸ் முக்கிய தளபதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்திரேலிய ராணுவம் நடத்திய இந்த திடீர் தாக்குதல் தொடர்பாக சிரியாவின் ராணுவ வட்டாரங்கள் ஏற்றுக்கொண்டு அறிவித்துள்ளதுடன், தமது ராணுவ தரப்பில் ஐந்து பேர் பலியாகி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ராணுவ முகாமில் இருந்த ஆயுத தளவாடங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் எரிந்து வெடித்து சிதறிய காட்சிகள் காணப்படுகின்றன.

இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்த மக்கள் தளபதி யார் என்பது தொடர்பாக இதுவரை உறுதியாக தெரிய வரவில்லை.

இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு இடையில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற இந்த இடைவிடாத யுத்தம் காரணமாக அப்பாவி மக்கள் பல்லாயிரக்கணக்கில் பலியாகி பல ஆயிரக்கணக்கில் காயமடைந்துள்ளனர் .

ஆனால் இடைவிடாது இஸ்ரேல் தனது இன அழிப்பு தொடர்ந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.