கண்ணீர் வணக்கம் …!

Spread the love

கண்ணீர் வணக்கம் …!

அலை கடலாய் திரண்டிங்கு
ஆர்ப்பரித்து வந்தார்க்கு …
நெஞ்சமதால் வாழ்த்துரைத்து
நெருடுகிறேன் என் வலியை ….

பூப்போல இருந்தவளாம்
புன்னகையை தந்தவளாம் ….
காற்றோடு மறைந்த தினம்
கண்கள் எல்லாம் நீராச்சு ….

பேச்செல்லாம் அவளாச்சு
பெருங்கடலாய் உறைந்தாச்சு …
மூச்செல்லாம் அவளாகி
முழு மதியாய் நிறைந்தாச்சு ….

வயிற்றுக்கு உணவின்றி
வழி யோரம் அலையையில …
நேர்த்திக்கு விட்டது போல்
நேர்ந்தெம்மை எடுத்தவளாம் ….

காற்று போல் தழுவி எம்மை
கண்ணீரை துடைத்தவளாம் …
பேச்சின்றி போன போ
பெருமனது உடைந்திருச்சு ….

கூற்றுவனே ஏன் வந்து
குலமகளை நீ பறித்தாய் …?
எம தர்மா எங்கிருக்காய்
என் முன்னே நீ வாடா ….

பெற்றவளாய் எமை அணைத்து
பேரன்பு செய்தவளை ….
குரல் நசுக்கி கொன்றதென்ன
கூற்றுவனே பதில் சொல்லாய் …………….

இன்று நாம் நிமிந்திருக்க
இல்லத்தில சிறந்திருக்க ….
உந்தனது கூடத்தில
உலவியவர் அழுகின்றோம் ….

கண்களில நீர் தந்து
கடுகதி மறைந்ததென்ன ..
நெஞ்ச மெலாம் வலி தந்து
நேர் விழியே உறைந்த தென்ன …?

வந்து வழி மலர் தூவி
வழியனுப்ப முடியலையே …
வீழ்ந்து மனம் கதறுதம்மா
விடலை உடல் நனையுதம்மா …

செந் தனலும் உன் உடலை
சேர்ந்து வந்து திண்றதுவோ ..?
கண்களது பார்த்திருக்க
கருகி நீறாய் உதிர்ந்தாயோ …?

கருகி நீ மறைந்தாலும்
கண்களது மறவாது ….
கை தொழுத பேரழகே
நவஜீவனம் மறவாது ……!

லண்டன் முரசு மோட்டை ஓன்றியத்தில் முழங்கிய கவி- கண்ணன்

கண்ணீர் வணக்கம் .
கண்ணீர் வணக்கம் .

      Leave a Reply