கண்ணீர் தந்த கடலே அழிக

Spread the love

கண்ணீர் தந்த கடலே அழிக

மண்டை தீவு கடல் இன்று
மரண கடல் ஆனதோ …?
உயிர் குடிக்கும் கடலாகி
உலவும் மனிதம் விரட்டுமோ …?

ஆடி படகில் ஏறி வந்தார்
ஆவியை தான் குடிக்குமோ ..?
ஆருமிங்கு உலவிடாது
அடங்கும் கடலாகுமோ …?

தேன் சுரக்கும் தோழர்களின்
தேகம் ஏனோ தின்றாய் …?
தேம்பி அழும் அவலம் ஒன்றை
தேடி ஏனோ தந்தாய் …?

நீர் பருக்கி மூச்சடக்கி
நினைவுகளை தின்றாய் ….
நீ எங்கள் கடல்தாயோ
நீ யழிந்து போவாய் ….

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -28/08/2017
28/08/2017 இன்று மண்டை தீவு கடலில் படகு கவிழ்ந்து
இறந்த தோழர்கள் துயர் அறிந்து ….
கண்ணீரால் குளிக்கிறது என் பேனா …!..!

Home » Welcome to ethiri .com » கண்ணீர் தந்த கடலே அழிக

    Leave a Reply