கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி
Spread the love

கண்ணீர் அஞ்சலி

நெஞ்சுக்குள் நிற்கின்ற பேரொளி – இவன்
நேயத்தில் வீசிடும் கதிரொளி
அன்பிலே கலங்கிடும் கண்விழி
அஞ்சா பேசிடும் தமிழ் மொழி

கொடை கொட்டியே பொழிந்திடும் பெருமழை
கொடி நாட்டியே எழுந்திட்ட பெருமலை
தடை தாண்டியே ஓடிய பெரும் அலை
தானத்தில் இவனே பெரும் தலை

வானத்தில் ஓடிய பெரும் முகில்
வாடியே வீழ்ந்தான் ஏன் துயில்
ஆழ் மனம் மறக்க மறுக்கிறதே – உன்
அன்பில் நொடிகளும் துடிக்கிறதே

இத்தனை வேகத்தில் ஏன் மறைந்தாய்
இந்த விழிகளில் நீர் ஏன் வைத்தாய்
உச்சத்தில் ஆடிய பெரும் முகில் – இன்று
உருகுதே பார் ஐயா உடல் தீயில்

கத்தியே அழுகிறோம் கண் திறவாய்
கண்ணீரை வந்து நீ துடைப்பாய்
என்றுன்னை இனி நாம் காண்போம்
ஏனோ இறைவா நீ பறித்தாய் ..

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 21-10-2023
காந்தி மாமா பிரிவின் துயரில் கண்ணீர் சமர்ப்பணம்
( திருவையாறு இரத்தினபுரம்)