கஞ்சா கற்பழிப்பு தமிழ் ஊடகங்களின் தலைப்பு

கஞ்சா கற்பழிப்பு தமிழ் ஊடகங்களின் தலைப்பு
Spread the love

கஞ்சா கற்பழிப்பு தமிழ் ஊடகங்களின் தலைப்பு

கஞ்சா கற்பழிப்பு தமிழ் ஊடகங்களின் தலைப்பு ,இலங்கையில் கஞ்சா போதைவஸ்து ஊடாக கற்பழிப்பு படுகொலைகள் இடம் பெற்று வருவதான தகவல் மறுபடியும் இலங்கையை ஆட்கொண்டுள்ளது .

இலங்கை ஒரு கஞ்சா கற்பழிப்பு தேசமாக உள்ளதான தோற்றப்பாட்டை தமிழர் புலம்பெயர் ஊடகங்கள் முதல் இலங்கையினுடைய ஊடகங்கள் ஏற்படுத்தி வருகின்றன.

இலங்கைக்கு சுற்றுலா பயணத்தை மேற்கொள்ளும் மக்களுடைய வருகையை அதிகரித்து அதனை மேம்படுத்த நடவடிக்கையில் இலங்கை உல்லாசத்துறை பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது .

தமிழ் ஊடகங்கள் முதல் சிங்கள ஊடகங்கள் வரை

ஆனால் அவ்வாறான நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இலங்கை போத வஸ்து கஞ்சாவுக்கு அடிமையான ஒரு தேசமாக தற்பொழுது தமிழ் ஊடகங்கள் முதல் சிங்கள ஊடகங்கள் வரை செய்திகளை தாராளமாக எழுதி வருகின்றன.

இதன் ஊடாக இலங்கையிலுள்ள வாலிபங்களுக்கு கஞ்சா போதை செய்திகளை ஊட்டி ,அதன் ஊடாக கஞ்சா வியாபாரங்களை நடத்துவதற்கு இந்த தமிழ் ஊடகங்கள் தலைப்புச் செய்திகளை இடுகின்றன .

மக்களாகிய நீங்கள் இந்த ஊடகங்களை காணுகின்ற பொழுது நாள்தோறும் கற்பழிப்பு கஞ்சா போன்ற தலைப்புச் செய்திகளை இவர்கள் எழுதி வருகின்றன.

சமூக பார்வையில் எத்தனையோ நல்ல விடயங்கள் காணப்படுகின்ற பொழுதும் அதனை எல்லாம் தட்டிக் கழித்து விட்டு நாள்தோறும் கஞ்சாவை போத வஸ்து தலைப்புச் செய்திகளை ஈட்டு வருகின்றது .

இதன் ஊடாக இலங்கையில் கொடி கட்டி கஞ்சா வியாபாரம் நடைபெறுகிறது என்கின்ற பெயரை இலங்கையின் மகுடமாக இவர்கள் சூட்டி வருகின்றனர் .

இதனையே ஆளும் அரச அதிகார வர்க்கங்களும் மகிழ்வோடு ஏற்று மகிழும் நிலையில் காணப்படுகின்ற்ன .

அதனால் தான் தமிழ் ஊடகங்கள் தலைப்புகளாக இந்த் செய்திகளை ஒட்டி வருகின்றன.

இவர்கள் காட்டில் நல்ல வியாபாரம்

இதன் ஊடாக இவர்கள் காட்டில் நல்ல வியாபாரம் நடக்கிறது போலும் .

சமூகம் சமூக அக்கறை தொடர்பாக பேசுகின்ற ஊடகங்களில் சமூகத் தலைப்புகள் இதுவாக பகிர முடியுமா என்கின்ற கேள்வியை தற்போது நாங்கள் முன்வைக்கின்றோம்.

பல்வேறுபட்ட மூத்த ஊடக யாம்பவான்கள் பத்திரிகையில் இவ்வாறான தலைப்புக்களை காண முடிவதில்லை .

அவ்வாறு வந்தாலும் ஆங்காங்கே ஒன்று இரண்டாக காணப்படுகின்றன .

ஆனால் தமிழ் இணைய வலைத்தளங்களை பார்க்கின்ற பொழுது ,இதனை ஆக்கிரமித்து செய்திகளை வெளியிடுவது ,அவர்கள் கஞ்சா போதை கற்பழிப்புக்கு ஆளாகி உள்ளார்கள் என்பதையே இந்த செய்திகள் காணப்படுகின்றன.

இனியேனும் இந்த கஞ்சா செய்தியாளர்கள் கஞ்சா செய்தியை நிறுத்துவார்களா ..?