ஒரே மாவில் மொறுமொறு தோசை|பஞ்சு போல இட்லி | Crispy Dosa | Sponge Idli |Idli Dosa Batter in Tami

ஒரே மாவில் மொறுமொறு தோசை|பஞ்சு போல இட்லி | Crispy Dosa | Sponge Idli |Idli Dosa Batter in Tami
Spread the love

ஒரே மாவில் மொறுமொறு தோசை|பஞ்சு போல இட்லி | Crispy Dosa | Sponge Idli |Idli Dosa Batter in Tami

ரோட்டு கடை சுவையில் நம்ம வீட்டில் ,ஒரே மாவில் மொறுமொறு தோசை|பஞ்சு போல இட்லி செஞ்சு சாப்பிடலாம் வாங்க.

இப்போ ஒரே மாவில் மொறுமொறு தோசை மற்றும் பஞ்சு போல இட்லி
எப்படி செய்வது அத்தகு தேவையான பொருட்கள் என்ன பார்க்கலாம் வாங்க .

இந்த தோசை இட்லி செய்வதற்கு மிக்சிங் போல் எடுத்து அதில
இரண்டு கப் அளவுக்கு இட்லீ அரிசி சேர்த்து கொள்ளுங்க .
இப்போ இந்த அரிசியை தண்ணி ஊற்றி இரண்டு தடவை நன்றாக கழுவி கொள்ளுங்க .

ஒரே மாவில் மொறுமொறு தோசை|பஞ்சு போல இட்லி | Crispy Dosa | Sponge Idli |Idli Dosa Batter in Tami

அடுத்து மேலும் ஒரு பாத்திரம் எடுத்து அதில அரை கப் அளவுக்கு உளுந்து ,வெந்தயம் கலந்து கழுவி எடுத்து மீள புதிய தண்ணி ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைத்திடுங்க .

ஊறி வந்த பின்னர் தண்ணியை வடித்து மிக்சியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்திடுங்க .

அடுத்து ஒரு சட்டியில் அரை கப் அளவு வெள்ளை அவல் எடுத்திடுங்க ,
தண்ணி ஊற்றி நன்றாக கழுவி எடுத்திடுங்க .இதையும் 10 நிமிடம் ஊறவைத்திடுங்க .அரசி ,அவல் எல்லாத்தையும் நன்றாக அரைத்து எடுத்திதூங்க .

அப்புறம் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி எட்டு மணி நேரம் ஊற வைத்திடுங்க .

செய்முறை இரண்டு .

இப்போ ஒரு சட்டியில் தோசைக்கு ஏற்றது போல மாவை எடுத்து தண்ணி போல கரைத்திடுங்க .அப்புறம் தோசை கல்லை சூடாக்கி அதன் மேல தோசை போல ஊற்றி எடுங்க .

தோசை மொறு மொறு என முறுக்கி வரும் வரை தோசையை சூடாக்கி எடுத்திடுங்க .இப்போ மொறு மொறு தோசை ரெடியாடிச்சு .

அப்புறம் இட்லி சட்டியில் இட்லி மாவை ஊற்றி 8 நிமிடம் சூடாக்கி எடுத்திடுங்க .அவ்வளவு தாங்க தோசை இட்டலி ரெடியாகிடிச்சு .

இது கூட கார சட்னி ,தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடுங்க
கடை போல சுவையில் இருக்கும் .

அவ்வளவு தாங்க .வாய்க்கு சுவையான மொறு மொறு தோசை பஞ்சுபோல
இட்லி ரெடியாகிடிச்சு .