ஒரு முறை உன்னை தா …!

ஒரு முறை உன்னை தா
Spread the love

ஒரு முறை உன்னை தா …!

வீடு வந்து என்னை தேடும்
வெண்ணிலா நீ தானோ
உன்னை தேடி நான் ஏங்கும்
உயிர் காதல் இது தானோ

மாலை ஒரு வேளை
மயக்கும் அதி காலை
நீ வந்தால் போதும்
நிகழ்ச்சிகள் தொடரும்

விடியாத இரவுக்குள்
மடியாத போர்வைக்குள்
உன்னோடு வாழும் வாழ்தால் தானே
உயிராகி மிஞ்சும் நாட்கள் தேனே

வீசிய வலைக்குள் விளையாடும் மீன்கள்
விட்டு உயிர் போகும்
கட்டுடல் அழகும் கரையாத கூந்தலும்
பட்டுடல் போகும் பாதியில் பாரும்

நிலையில்லா வாழ்வுக்குள்
நித்தம் போராட்டம்
நினைவழியா கனவுக்குள்
நீயே என் தேரோட்டம்

ஓடும் நதியாய் தேடி வரவா
ஒரு நாளும் மறக்கா முத்தமிடவா
நெஞ்சுக்குள் வாழும் சாமியடி
நீ வந்தால் வாழ்வேன் ஆண்டுநூறடி …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 30-12-2021

Leave a Reply