ஒருவர் விமான நிலையத்தில் கைது
ஒருவர் விமான நிலையத்தில் கைது ,விசாரணைக்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் டுபாயில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தனியார் நிறுவனமொன்றின் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி 108 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பண மோசடி செய்ததாக சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 32 வயதுடைய கண்டியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.