ஒருவர் காயம் துப்பாக்கி சூட்டில்

ஒருவர் காயம் துப்பாக்கி சூட்டில்
Spread the love

ஒருவர் காயம் துப்பாக்கி சூட்டில்

ஒருவர் காயம் துப்பாக்கி சூட்டில் , இல்லைங்கையின் பிதிகள பகுதியில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு பாதையில் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மருமகன் வீட்டுக்கு வந்திருந்த மாமனார் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

திடீரென துப்பாக்கி சூட்டு தாக்குதல்

முகமூத்தை மறைத்துக் கொண்டு வந்த நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினார் .

இதன் பொழுது அங்கு வருகை தந்திருந்த மாமனாரின் காலில் அந்த சூட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது .

காயம் அடைந்தவர் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

எனினும் தெரிவாதீனமாக அவர் உயிர்தப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

.இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கான காரணம்

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்று வருகின்றனர் .

குடும்பப் பகமை காரணமாக இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றதா என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

அங்கு வந்த துப்பாக்கி தாரி ஒருவரை மட்டும் இலக்கு வைத்து துப்பாக்கி சூட்டு தாக்குதல் காரணம் என்ன என்கின்ற வகையில் தற்பொழுது போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மாமாவை போட்டுத்தள்ள மருமகன் முயன்றாரா அல்லது மாமா மீதுள்ள அதீத கோபம் காரணமாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலா என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்த காணப்படுவதும் துப்பாக்கி சூடு சம்பவங்களினால் அதிக மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன .

இலங்கையில் ஆயுத கலாச்சாரம் அழிக்கப்பட்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு ஓய்வு பெற்ற நிலையில் ,மீளவும் இலங்கை ஆட்கொள்ளும் இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.