ஏன் வர மறுக்கிறாய்

ஏன் வர மறுக்கிறாய்
Spread the love

ஏன் வர மறுக்கிறாய்

காலை வந்து எனை எழுப்பும்
கதிரவன் போல் நீ இருந்தால்
நெஞ்சம் எல்லாம் உன்னை சுமக்கும் – உன்
நினைவுடனே மனம் வாழும்

மெல்ல வந்து தாலாட்டும்
மெல்லிசை தென்றல் போல
எனை வந்து நீயணைத்தால்
என் ஏக்கம் தீர்ந்து போகும்

சின்ன மீசை மெல்ல வந்து
சீக்கிரமே குற்றும் என
எண்ணியிருக்கும் இக் காலம்
ஏக்கமின்றி தீர்ந்து போகும்

மஞ்சம் மட்டும் உன்னை எண்ணி
மணி கணக்காய் காத்திருக்க
நெஞ்சே வர மறுப்பதென்ன – என்
நியம் காண தவிர்ப்பதென்ன ..?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 24-03-2024