ஏன் துரோகம் செய்தாய் …?

ஏன் துரோகம்
Spread the love

ஏன் துரோகம் செய்தாய் …?

சொந்தம் என்று சொல்ல
நீயும் எனக்கு இல்ல
பந்த பாசம் காட்ட
யாரும் இல்ல வீட்ட

நம்பி உன்னை வந்தேனே
நாள் கணக்காய் நடந்தேனே
வெம்பி அழ வைத்தாயே
வேதனையை தந்தாயே

வாழும் காலம் கொஞ்சம்
ஆளும் காலம் கொஞ்சம்
இடை உள்ள காலத்தில
இன்னல்கள் ஏராளம்

ஆசை வைத்து நான் நடந்தா
மோசம் செய்தேன் நீ படர்ந்த
என் மேலே குற்றங்களை
ஏன் அடுக்கி நீ பறந்த

விதி செய்த சதி தானோ
விளையாடல் இது தானோ
மறந்துன்னை நான் போக
மரண அடி இது தானோ ..!

வன்னி மைந்தன்
ஆக்கம் 28-12-2021

    Leave a Reply