ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

ஏன் எம்மை தவிக்க வைத்தாய்
Spread the love

ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

கடந்த இரவு காரிருள் சூழ
கண்கள் அழுதது காலம் துடித்தது
ஒருமுறைக உந்தன் திரு முகம் காண
ஓராயிரம் உறவு அர்ச்சுனா துடித்தது

ஏக்கத்தில் எண் திசையும் உறைந்தது
ஏராளம் சோகத்தில் ஏங்கி மனம் கொதித்தது
உன் மீது கொண்ட பாசம்
உண்மையானது உன்னாலே நேரம் இருண்டது

இத்தனை உறவை எப்படி இணைத்தாய்
இதயங்கள் ஏங்க ஏனடா வைத்தாய்
உண்ணாமல் உனக்காய் காத்திருந்த உறவு
உறங்காமல் உனக்காய் விழித்த உறவு

எண்ணி பார்க்கையில் என் மனம் வலிக்கிறது
எதுகை மோனையும் எகிறி குதிக்கிறது
தேடும் உறவை தேடி வைத்தவனே
தேசம் உன்னை தலையில் சுமக்கும்

தலைவன் தேடும் மக்கள் தலைவிதி மாற்று
தளராது சேனை பூட்டு தமிழுக்கு வழி காட்டு
வாழும் போதே வாழ்பவனே வையம் வணங்கு
வரலாறு நாட்டு வணங்கிறோம் விடுதலை நாட்டு .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 03-09-2024