ஏன் அழுகின்றாய்

ஏன் அழுகின்றாய்
Spread the love

ஏன் அழுகின்றாய்

தனிமையில் நீ இருந்து
தங்கமே ஏன் அழுகின்றாய்
அங்கமெல்லாம் தினம் வாட
ஆர் உயிரே ஏன் நோகிறாய் ,,

உண்ணாமல் நீ இருந்து
உயிரே தினம் வாடலாமோ
என் நாளும் நான் வாட
என் உயிரே வைக்கலாமா

இன்பம் துன்பம் இரு பாதி
இதயமே புரிந்து விடு
வாழும் போதே
வசந்தமாய் வாழ்ந்து விடு

கண் இருந்து நீர் வடிய
கண்ணே இதயம் நோகுதே
மண்ணை விட்டு போக தானே
மனமே எண்ணுதே

உள்ளம் நீ வாட
உறங்க முடியலையே
என் மனதை
ஏ மனமே புரிந்து விடு…..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 02-09-2024