ஏடன் வளைகுடாவில் கப்பல்மீது தாக்குதல்

ஏடன் வளைகுடாவில் கப்பல் மீது தாக்குதல்
Spread the love

ஏடன் வளைகுடாவில் கப்பல்மீது தாக்குதல்

ஏடன் வளைகுடாவில் கப்பல்மீது தாக்குதல் ,ஏடன் வளை குடாவில் கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக ஹவுதிகள் தெரிவித்துள்ளனர் .

ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த கிரேக்க நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்றின் மீது ஏமன் ஹவுதிய போர்படைகள் கடும் தாக்குதலை நடத்தின .

கப்பல் ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டு விமானங்களைக் கொண்டு கடும் தாக்குதலை நடத்தியதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .

இஸ்ரேலியா நாட்டு சார்பு கப்பல் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு உரிமை கோரி உள்ளது .

இவர்கள் நடத்திய கப்பல் ஏவுகணை விமான தாக்குதல் மூலம் அந்தக் கப்பலின் மேல் தளத்தில் உள்ள இயந்திர அறையிலும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதில் பயணித்த மாலுமிகளுக்கு உயிர் சேதங்கள் ஏதும் ஏற்பட்டனவா என்பது தொடர்பாக உடனடியாக தெரிய வரவில்லை.

ரபா எல்லையில் தங்கி இருக்கக்கூடிய அப்பாவி பலத்தின மக்கள் மீது இஸ்திரேலியா இராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையிலேயே இந்த கடல் வழி மீதான தாக்குதலை ஹவுதி படைகள் தீவிர படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தொடர்ந்து இஸ்ரேல் காசாவுக்கு இடையில் போர் தொடர்ந்து நீடித்தால் தமது தாக்குதல்கள் இதைவிட இரட்டிப்பாக தீவிர படுத்த படும் என ஆன்சர் அல்லா ஹவுதி படைகள் தெரிவித்துள்ளன .

இஸ்ரேல் படைகளுக்கு இவ்வாறு தாக்குதல் நடத்தி கடும் கண்டம் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

அடங்க மறுத்தால் எமது அடி இதைவிட இரண்டு மடங்காக பலமாக இருக்கும் என்பதே ஏமன் ஹவுதி அன்சரல்லாவின் பதிலாக உள்ளது.