ஏடன் வளைகுடாவில் எரியும் கப்பல்கள்

ஏடன் வளைகுடாவில் எரியும் கப்பல்கள்
Spread the love

ஏடன் வளைகுடாவில் எரியும் கப்பல்கள்

ஏடன் வளைகுடாவில் எரியும் கப்பல்கள் ஹவுதிகள் கப்பல் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளனர் .

தமது தாக்குதலுக்கு உள்ளான மூன்று கப்பல்களும் இஸ்ரேல் அரசுக்கு தொடர்பு பட்ட கப்பல்கள் என, ஏமன் ஹவுதி போராளிகள் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளனர் .

இஸ்ரேல் பாலஸ்தினம் போர்


இஸ்ரேல் பாலஸ்தினம் காஸாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெறுவதால் காசா மக்களுக்கு ஆதரவாக ,ஏடன் வளைகுடா பகுதி ஊடாக பயணிக்கும் இஸ்ரேல் கப்பல்களை இலக்கு வைத்து ,தாக்குதல் நடத்தி வருவதாக ஹவுதிகள் தெரிவித்துள்ளன .


அப்பாவி காசா மக்கள் மீதான போரை இஸ்ரேல் நிறுத்தினால் ,தமது செங்கடல் ,வழியாக பயணிக்கும் கப்பல்கள் மீதான தாக்குதல் நிறுத்த படும் என , ஹவுதிகள் அறிவித்துள்ளன.

இந்தியாவுக்கு சென்று கொண்டிருந்த கப்பல்

சரக்குகளை ஏற்றியவாறு இந்தியாவுக்கு சென்று கொண்டிருந்த கப்பல்கள் மீதே தாக்குதல் நடத்த பட்டுள்ளது .


இஸ்ரேல் காஸாவுக்கு இடையில் யுத்தம் ஆரம்பிக்க பட்ட நாள் முதலாக, இந்தியா நோக்கி செல்லும் கப்பல்கள் மீதே ,அதிகமான தாக்குதல் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.

வீடியோ