எரிந்த வீடு கண்ணீரில் குடும்பம்

எரிந்த வீடு கண்ணீரில் குடும்பம்
Spread the love

எரிந்த வீடு கண்ணீரில் குடும்பம்

எரிந்த வீடு கண்ணீரில் குடும்பம் ,கண்டவளையில் வீடு ஒன்று திடீரென தீப்பற்றி கொண்டது ,இதனால் வீட்டை இழந்து குடும்பம் கண்ணீரில் தத்தளிக்கின்றது .

கண்டாவளை பிரதேச பகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடு ,திடீரென தீபிடித்து எரிந்துள்ளது .

அந்த வீடு முற்றாக தீயில் எரிந்து சாம்பலான நிலையில் ,அங்கு தூங்கிக் கொண்டிருந்த குழந்தை தப்பித்துள்ளது.

தாயார் மீனை வெட்டுவதற்கு வெளியில் சென்ற பொழுது ,திடீரென வீடு தீப்பற்றி கொண்டது .

அப்பொழுது ஏனைக்குள் குழந்தை ஒன்று உறக்கத்தில் இருந்துள்ளது .

கண்டாவளையில் தீயில் எரிந்த வீடு

ஓடி சென்று தாயார் குழந்தையை தூக்கிய நிலையில் , குழந்தை தெய்வாதீனமாக தப்பியுள்ளது .

எனினும் வீடு முற்று முழுதாக எரிந்து சாம்பலாகி உள்ளது ,இதன் பொழுது வீட்டிலிருந்து மீன்வலைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் உள்ளிட்ட பொருட்கள் எரிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர் .

தயார் அவல குரல் எழுப்பியதை அடுத்து அயலவர்கள் ஓடிவந்து தீயினை அணைக்க முற்பட்ட பொழுதும், அந்த ஓலை குடிசையில் முற்று முழுதாக எரிந்து நாசமாகியுள்ளது .

இந்த தீ விபத்துக்கான காரணத்திற்காக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.

தாயார் தனது சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த பொழுது ,அங்கிருந்த தீ பக்கத்தில் உள்ள ஓலையில் பற்றி கொண்டதன் அங்கு தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிய வருகிறது .

வீடு எரிந்தது எப்படி ..?

தற்பொழுது போலீசார் இந்த தீ சம்பந்தம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

தீயில் வீடு எரிந்த நிலையில் ,தற்பொழுது அவர்கள் தமது வீட்டை பறிகொடுத்து கண்ணீருடன் தத்தளித்து வருகின்றனர்.

அயலவர்கள் தற்பொழுது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடு எரிந்து தீயில் அழிந்த இந்த செய்தியானது காட்டுதியாக பரவிய நிலையில், அதனை கண்ணுற பல மக்கள் அந்த பகுதியில் குவிந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனஎன்பது குறிப்பிடத்தக்கது .