எம் நாட்டின் இறையாண்மை போனதெங்கே

எம் நாட்டின் இறையாண்மை போனதெங்கே
Spread the love

எம் நாட்டின் இறையாண்மை போனதெங்கே

எம் நாட்டின் இறையாண்மை போனதெங்கே
எம்மவர்கள் பலருழைத்து ஏற்றுவித்த வல்லாண்மை
மங்குதிங்கே
மதியற்றோர் கொண்ட மடத்தாலே!

நம் நாடென்ன நாடிதென நாவுரைக்க கூசுதிங்கே
நாடி வரும் நல்லோர் நன்கறிந்து கூடினாலும்
நாடிங்கு எழுவதெந்நாள்
நாணுதிங்கே
நாணமற்றோர் கொண்ட நடப்பாலே!

நாம் நாடுகின்ற நாடாள்வார் நாட்டிலெங்கே
நாடிய மக்கள் நலமெங்கே
நாம் நாடுகின்ற நாடொன்று
நாளாகத் தேய்வதிங்கே
நாடற்றோர் நாம் கொண்ட சாபத்தாலே!

தனித்த தமிழின் பெருமையறிந்த தமிழரங்கே
தடையை உடைத்தாலே
மனித்த பிறவி பயனறிந்த
மனிதநேய தமிழரங்கே
மடையை உடைத்தாலே
தனித்த நாடொன்று
தனியாயங்கே
அமைந்திடுமே
தன்மானத் தமிழர் கொண்ட தரணியிலே!

நாட்டிற்காய் தமையீய்ந்த நாயகர்களின் அறத்தையிங்கே
சீரான உணர்வுகளை
சீர்மிகுந்த நற்செயலையிங்கே
நேரான வழிகளிலே
ஊரறிய உலகறிய
ஊர் மக்கள் உலக மக்கள்
உளமறிய செய்வதிங்கே
நேரான வழி கொண்ட
நேர் கொண்ட விழி கொண்ட
கூரறிவுடையோர் கொண்ட
கடமையதிலே!

-நிலாதமிழ். கவிதைகள்