எம் அவலம் யார் புரிவார்

Spread the love

எம் அவலம் யார் புரிவார்

ஆளை வாட்டும் குளிருக்குள்ளே
ஆயுள் மெல்ல கரைகிறதே ….
ஆடை மாற்றி ஓடும் வாழ்வை
அல்லும் ,பகலும் இடுகிறதே ….

மஞ்சள் வெயில் உடல் தழுவும்
மாசம் மனது தேடுறதே ..- நாள்
மங்கும் ஒளியின் காலத்தையே
மனது இன்று வெறுக்கிறதே …..

ஆடை கட்டிய வெங்காயம்
அது போல் உடலும் ஆகிறதே …
உயிரை கொல்லும் குளிரை அடக்க
உடலில் சுமையை குவிக்கிறதே ….

மறைக்க உடலை மறந்தாலே
மரணம் உயிரை தின்றிடுமே ….
கொடும் பனியில் நனையும் வாழ்வதனை
கொஞ்சும் உறவுகள் அறிந்திடுமோ ..?

  • வன்னி மைந்தன் – ( ஜெகன் )
    ஆக்கம் -22-01-2018
  • வன்னி மைந்தன் கவிதைகள்
Home » Welcome to ethiri .com » எம் அவலம் யார் புரிவார்

    Leave a Reply