எமிரேட்ஸ் விமானம் ஒன்று மத்தல மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

Spread the love

எமிரேட்ஸ் விமானம் ஒன்று மத்தல மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க சர்வதே விமான நிலையத்தை அண்டிய பகுதிகளில் நிலவிய சீரற்ற வானி​லையை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டுபாயில் இருந்து வருகை தந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே – 652 ரக விமானம் நேற்று (18) மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக வந்துள்ளது.

அந்த சந்தர்பத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக அந்த விமானத்தை மத்தல விமான நிலையத்தில் தரையிறக்க விமானநிலைய அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.

இதற்கமைய நேற்று மாலை சுமார் 6.56 மணி அளவில் குறித்த விமானம் மத்தல சர்தேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

Leave a Reply